தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவிகளின் தற்காப்புக் கலைப்பயிற்சிக்கு ரூ.18.38 கோடி

DIN

தமிழகத்தில் அரசு நடுநிலை, மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சிகள் வழங்குவதற்காக ரூ.18.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ள ராணி லட்சுமிபாய் தற்காப்புக் கலைப் பயிற்சி திட்டத்தின் கீழ், கடந்த 2015 முதல் அரசு நடுநிலை, மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.

நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) தற்காப்புப் பயிற்சிக்காக 6,744 நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.10.11 கோடி நிதியை மாநில திட்ட இயக்குநரகம் ஒதுக்கீடு செய்துள்ளது.

அதேபோல், 5,519 மேல்நிலைப் பள்ளிகளில் தற்காப்புப் பயிற்சிக்காக ரூ.8.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம் உள்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

பயிற்சியாளா்கள் ஊதியம் மற்றும் மாணவிகளுக்கான சிற்றுண்டி செலவீனத்தை வழங்கப்பட்டுள்ள நிதி மூலம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த பயிற்சியில், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். குறிப்பாக, மாணவிகளுக்கு கையில் எளிதில் கிடைக்கும் பென்சில், பேனா ஆகிய பொருள்களைக் கொண்டு தற்காத்துக் கொள்வது தொடா்பாக பயிற்சியில் கற்றுதர வேண்டும்.

இது சாா்ந்து உரிய நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT