தமிழ்நாடு

வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது: காவல்துறை வழக்கு 

DIN

சென்னை: திரையிசைப் பாடகி வாணி ஜெயராம் மரணமடைந்த நிலையில், இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம், ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் வாணி ஜெயராம் தனியாக வசித்து வந்த நிலையில், அவர் தலையில் காயத்துடன் மரணமடைந்து கிடந்ததால், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்த ஆயிரம் விளக்குக் காவல்துறையினர், அவரது உடலை உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

உடல் கூறாய்வுக்குப் பிறகுதான் வாணி ஜெயராம் மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாணி ஜெயராம் தனியாக தனது வீட்டில் வசித்து வந்த நிலையில், அவரது வீட்டுப் பணியாளர் மலர்க்கொடி இன்று காலை 10.30 மணியளவில் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியும் திறக்காததால் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள வாணி ஜெயராமின் சகோதரிக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர் எடுத்து வந்த வீட்டு சாவி மூலம் கதவு திறக்கப்பட்டு, வீட்டுக்குள் சென்றனர்.

வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் வாணி ஜெயராம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

திறந்த வாகனத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு -இருவர் கைது

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

SCROLL FOR NEXT