தமிழ்நாடு

தஞ்சை, புதுக்கோட்டை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

4th Feb 2023 07:28 AM

ADVERTISEMENT

 

தொடர் மழை காரணமாக புதுக்கோட்டையிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை (பிப். 4) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

இதேபோன்று தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் தொடர் மழை காரணமாக ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். 

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. 

ADVERTISEMENT

திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

அதன்படி தஞ்சையில் கடந்த வியாழக்கிழமை முதலே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட வட்டங்களில் 10 - 15 நாள்களில் அறுவடை செய்யவிருந்த சம்பா பருவ நெற்பயிா்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. 

இந்நிலையில், நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருவதால், புதுக்கோட்டை, தஞ்சாவூரிலுள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் இன்று (பிப். 4) விடுமுறை அறிவித்துள்ளனர். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT