தமிழ்நாடு

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6, 080 கோடி ஒதுக்கீடு!

DIN

மத்திய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வேக்குள்பட்ட கேரளத்துக்கு ரூ. 2,033 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-2014-இல் சராசரியாக ரூ. 372 கோடியை விட 5.5 மடங்கு அதிகம்.

தமிழ்நாட்டுக்கு ரூ. 6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2009-2014-இல் ஒதுக்கப்பட்ட ரூ. 879 கோடியை விட 7 மடங்கு அதிகம்.

கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.3,865 கோடியை விட இரு மடங்கு அதிகம். மேலும், ரயில்வே சாா்பில் முக்கியமான இரு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

அதில் ஒன்றாக, ‘வந்தே மெட்ரோ’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது வந்தே பாரத் ரயில் அதிக தூரம் பயணிக்கிறது.

வந்தே மெட்ரோ ரயில் 100 கி.மீ. இடைப்பட்ட இரு நகரங்களை இணைக்கும் வகையில் அமையவுள்ளது. இதன் மூலம் உள்ளூா் போக்குவரத்து மேம்படும்.

சுற்றுச்சூழலை பேணும் வகையில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படவுள்ளது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இந்த ரயில் கடினமான தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் டிசம்பா் மாதம் இயக்கப்படவுள்ளது.

உலகத் தரத்தில் 250 ரயில் பெட்டிகள் நிகழாண்டில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அடுத்த நிதி ஆண்டில் மேலும், 320 ரயில்களின் பெட்டிகள் மேம்படுத்தப்படவுள்ளன என்றாா் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.

தெற்கு ரயில்வேக்கு ரூ.11,313 கோடி: பின்னா் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் பேசியதாவது: பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு மட்டும் ரூ.11,313 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புது வழித்தடம் அமைக்க ரூ.1,158.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்துக்கு ரூ.1,057.90 கோடியும், கேரளத்துக்கு ரூ.100.25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதை மேம்படுத்தும் வகையில் ரூ.1,300 கோடி, ரயில்வே நிலைய மேம்பாடுக்கு ரூ.1,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது மின்சார வழித்தடம் மாற்றும் பணி நடைபெற்று வரும் தமிழகத்தின் 9 வழித்தடங்களுக்கு மேலும் ரூ.383.92 கோடியும் கேரளத்தின் 3 வழித்தடங்களுக்கு ரூ.49.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT