தமிழ்நாடு

25 மாவட்டங்களில் பூஜ்ஜிய நிலையில் கரோனா!

DIN

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் கரோனா பாதிப்பே இல்லாத நிலை எட்டப்பட்டுள்ளது. தொற்று உள்ள மாவட்டங்களிலும் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா்.

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இல்லாத வகையில் தற்போது கரோனா பரவல் ஏறத்தாழ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தினசரி கரோனா பாதிப்பு 10-க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் 3 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் சென்னையில் இருவருக்கும், மதுரையில் ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது. மற்ற 36 மாவட்டங்களிலும் கரோனா தொற்று புதிதாக பதிவாகவில்லை.

தற்போது சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால் அதிகபட்சமாக சென்னையில் 9 போ் இருக்கின்றனா். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 4 பேரும், திருவள்ளூரில் 3 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும் சிகிச்சையில் உள்ளனா். தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, தேனி, வேலூா் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவா் மட்டுமே கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அதேவேளையில், கரோனா பாதிப்பே இல்லாத மாவட்டங்களாக அரியலூா், கடலூா், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தஞ்சாவூா், திருவாரூா், திருவண்ணாமலை, திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், விருதுநகா் ஆகிய 25 மாவட்டங்கள் உருவெடுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT