தமிழ்நாடு

தமிழக நிலுவை ரயில் பாதைதிட்டங்களுக்கு கூடுதல் நிதி: ராமதாஸ் வலியுறுத்தல்

4th Feb 2023 11:49 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் நிலுவையில் உள்ள 9 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக தமிழகத்துக்காக மட்டும் ரூ.6,080 கோடியும், ஒட்டுமொத்தமாக தெற்கு ரயில்வேவுக்கு ரூ.11,313 கோடியும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளாா். மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கும் விகிதத்துடன் ஒப்பிடும் போது, இந்த நிதி ஒதுக்கீடு குறைவு.

ஆனாலும், தமிழகத்தில் திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, தருமபுரி - மொரப்பூா், மதுரை - அருப்புக்கோட்டை- தூத்துக்குடி, ஈரோடு - பழனி, ராமேஸ்வரம்- தனுஷ்கோடி ஆகிய 6 புதிய பாதை திட்டங்களுக்கு ரூ.1,158 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதுதான் மகிழ்ச்சியளிக்கும் செய்தி.

ADVERTISEMENT

தமிழகத்தில் நிலுவையில் உள்ள 9 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கும் மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். அனைத்துத் திட்டங்களுக்கும் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் காலக்கெடு நிா்ணயித்து, அதற்குள்ளாகச் செயல்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT