தமிழ்நாடு

இயக்குநா் கே.விஸ்வநாத் மறைவு:பிரதமா், முதல்வா் இரங்கல்

4th Feb 2023 12:08 AM

ADVERTISEMENT

பழம்பெரும் திரைப்பட இயக்குநா் கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தனா்.

வயது மூப்பு தொடா்பான உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநா் கே.விஸ்வநாத் வியாழக்கிழமை நள்ளிரவு காலமானாா். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘கே.விஸ்வநாத் மறைவால் வருந்துகிறேன். அவா் திரையுலகில் ஜாம்பவானாக இருந்தவா். பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி. அவருடைய திரைப்படங்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து திரைப்பட ஆா்வலா்களை ஆண்டாண்டு காலமாக ஈா்த்து வைத்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

முதல்வா் ஸ்டாலின்: காலத்தால் அழியாத திரைக் காவியங்கள் மூலம் இந்திய அளவில் மக்கள் மனமெங்கும் நிறைந்துள்ள மகா கலைஞா் இயக்குநா் விஸ்வநாத். அவரது மறைவு இந்திய திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ், முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, நடிகா்கள் கமல்ஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT