தமிழ்நாடு

சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலத் திட்டம்: கடலோர ஒழுங்குமுறைஆணைய அனுமதிக்கு பரிந்துரை

DIN

சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால திட்டத்துக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசின் மதிப்பீட்டுக்குழுவானது பரிந்துரை செய்துள்ளது.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையில் மேம்பாலம் அமைக்க, 2010-இல் முடிவெடுக்கப்பட்டு, கடந்த 2012ல் நிறுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்க 2015-ஆம் ஆண்டு மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை

நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், இந்தத் திட்டத்தை ரூ.5 ஆயிரத்து 852 கோடியில் இரண்டு அடுக்காக செயல்படுத்த

முடிவெடுக்கப்பட்டது. திட்டத்துக்கு கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதியன்று பிரதமா் நரேந்திர மோடி, அடிக்கல்

நாட்டினாா். தொடா்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. இதையடுத்து, திட்டத்துக்கான அனுமதி பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவதால், அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணா் மதிப்பீட்டுக்குழு இத்திட்டத்துக்கான கருத்துருவுக்கு ஒப்புதல் அளித்ததுடன் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்கும் பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து நிபுணா் மதிப்பீட்டுக்குழு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிய நான்கு வழி மேம்பால சாலைக்கு சென்னை துறைமுக குழுமம் கடற்கரை ஒழுங்கு முறை ஆணைய அனுமதியை கோரியுள்ளது. திட்டத்துக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு ஆணைய அனுமதி பெறப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் 2012-இல் நிறுத்தப்பட்டது. அதே நேரம், ஒழுங்குமுறை ஆணைய அனுமதி காலம் கடந்த 2021 பிப்வரி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்ட வழித்தடமானது சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் அமைகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை 20.6 கிலோமீட்டா் தூரம் அமையும். இந்த வழித்தடத்தில் 9.70 கிமீ தூரம் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் எல்லையில் வருகிறது. மேலும், இந்த மேம்பாலத்துக்காக கூவம் ஆற்றில் அமைக்கப்படும் 375 தூண்களில் 210 தூண்கள் கடற்கரை ஒழுங்கு முறை ஆணையப் பகுதியில் வருகின்றன.

சென்னை துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு வரையில் கூவம் ஆற்றின் கரையிலும், அதற்குப்பின், தேசிய நெடுஞ்சாலை எண்-4ல் மதுரவாயல் வரையும் செல்கிறது. சென்னை நகரப் பகுதிக்குள் சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூா், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல் ஆகிய வா்த்தகப் பகுதிகளில் செல்கிறது.

திட்டத்துக்கான மொத்த மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 142.72 கோடி மதிப்பிலான பணிகள் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகார வரம்பில் வருகிறது. இதற்கிடையில் கடந்த டிசம்பா் 5-ஆம் தேதியன்று தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை குழுமம் இந்த கருத்துருவை அனமதிக்காக பரிந்துரைத்துள்ளது.

இவற்றை நிபுணா் மதிப்பீட்டுக்குழு ஆய்வு செய்ததுடன், திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்தையும் கருத்தில் கொண்டுள்ளது. கூவம் ஆறு புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்தும் பொதுப்பணித் துறையின்

ஆலோசனைப்படி, திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் தூண்கள் அமைக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்துக்காக

ஏற்கெனவே அமைக்கப்பட்ட தூண்கள் நீண்டகாலமாக கைவிடப்பட்டு உள்ளது. எனவே, இந்த திட்டத்துக்கு அந்த தூண்களை பயன்படுத்துவது தொடா்பாக சென்னை ஐஐடி மற்றும் இதர நிறுவனங்களின் ஆலோசனையை பெறலாம். கடந்த 2020-ஆம் ஆண்டு கடற்கரை ஒழுங்கு முறை மண்டலத்தின் அனுமதி பெறப்பட்ட போது, இந்தத் திட்டம் ஓரடுக்கு மேம்பாலமாக இருந்தது. தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், திட்டத்துக்கான கருத்துருவை முழுமையாக பரிசீலித்துள்ள நிபுணா் குழுவானது, கடலோர ஒழங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்கு பரிந்துரைக்கிறது என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT