தமிழ்நாடு

ஜெயகுமார் மீது பல்வேறு புகார்கள் உள்ளன: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

DIN

ஈரோடு: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது பல்வேறு புகார்கள் உள்ளன என ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.    
                                
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார்.

அப்போது: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டிட்டு வெற்றி பெறுவதை அதிகமாக விரும்புகிறேன். எனது மகன் பணியை நான் தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

நமது முதல்வர் ஈரோடுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்காக நான் பாடுபடுவேன். இதற்காக அமைச்சர் சு.முத்துசாமி, முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் இணைந்து செயல்படுவேன். இந்த தேர்தலில் நிச்சயமாக நாங்கள் மிக பெரும் வெற்றியை பெறுவோம். ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாடுபடுவேன். இதைப்போல் சாய கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பாடுபடுவேன். 

திமுகவினர் தேர்தல் பணிகளை சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் மிக பெரிய வெற்றியை பெறுவோம்.

பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக இரு அணிகளையும் இணைக்க முயற்சி செய்து வருகிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணாமலை பொறுத்தவரை அவர் என்னைவிட பெரிய மனிதர், நான் அவரை விட சின்ன மனிதர் அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. மேலும் எதைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன். 

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் 30 ஆயிரம் வாக்காளர்களை புதிதாக இணைத்துள்ளார்கள் என்று புகார் அளித்துள்ளார். அது குறித்து கேள்விக்கு அவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன என்று இளங்கோவன் கூறினார். 

தேர்தல் நடத்தும் அலுவலர் கே.சிவகுமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT