தமிழ்நாடு

அண்ணாவின் முழக்கத்தை மெய்ப்பிக்க உறுதியேற்போம்: மு.க. ஸ்டாலின்

3rd Feb 2023 11:17 AM

ADVERTISEMENT

 

அறிஞர் அண்ணாவின் முழக்கத்தை மெய்ப்பிக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார். 

அண்ணாவின் 54வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னை மெரினாவிலுள்ள அண்ணா நினைவிடம் நோக்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது. 
பின்னர், மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

ADVERTISEMENT

களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள்! 
தம்பி என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்!

தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம எனக் குறிப்பிட்டுள்ளார். 

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT