தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1454 கன அடியாக அதிகரிப்பு

3rd Feb 2023 08:22 AM

ADVERTISEMENT



மேட்டூர்: மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து 1454  கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மலையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து நான்காவது நாளாக அதிகரித்து வருகிறது. 

இதையும் படிக்க: தஞ்சை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்  103.72 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1304 கன அடியிலிருந்து 1454 கன அடியாக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.74 டி.எம்.சியாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT