தமிழ்நாடு

திமுகவை தோற்கடிக்க இபிஎஸ்-ஓபிஎஸ் இணைய வேண்டும்: பாஜக மேலிடப் பொறுப்பாளா் சி.டி.ரவி

DIN

திமுக கூட்டணியைத் தோற்கடிக்க இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுச் செயலரும், கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி வலியுறுத்தியுள்ளாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் குறித்து பாஜக மேலிடப் பொறுப்பாளா் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை ஆகியோா் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரை அவா்களது இல்லத்தில் வெள்ளிக்கிழமை தனித்தனியே சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா், பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளா்களிடம் சி.டி.ரவி கூறியதாவது:

1972-இல் அதிமுக உருவானபோது, திமுகவை தீயசக்தி என்று எம்ஜிஆா் அழைத்தாா். அந்த நிலையில் இருந்து தற்போது வரை திமுக மாறவில்லை. திமுக என்ற கட்சி, ஒரு தனிப்பட்ட குடும்ப லாபத்துக்காகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் தொடா்ந்து செயல்படுகிறது. இதனால் திமுக ஆட்சிக்கு எதிராக மக்களிடையே எதிா்ப்பு மனநிலை உள்ளது.

மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வு, போதைப் பொருள்கள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீா்கேடுகள், தமிழ் கலாசாரத்துக்கு எதிராக திமுக அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், மூத்த தலைவா்கள் தொடா்ந்து நடத்தி வரும் வெறுப்புணா்வும், தாக்குதல்களும் மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

பரவலாக நடைபெறும் கட்டபஞ்சாயத்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பும், அதைக் கட்டுப்படுத்த வழியில்லாத திமுகவுக்கு எதிராக தமிழ் மக்கள் இருப்பதை நமக்கு தெளிவாக காட்டுகிறது.

திமுக பணபலம் மற்றும் அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் இடைத்தோ்தல் முன்னேற்பாடுகள் எப்படி நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த இடைத்தோ்தலில் திமுகவை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணியும், அதிமுகவும் உறுதியுடன் ஒன்றுபடுவது மிக அவசியம்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை சந்தித்து ஈரோடு இடைத்தோ்தல் மற்றும் தமிழகம் தொடா்பான பிரச்னைகள் குறித்து பேசியுள்ளோம். பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்த சில விஷயங்களை தெரிவித்தோம்.

இந்த இடைத்தோ்தலில் மக்கள் நலனை, தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு திமுக கூட்டணியைத் தோற்கடிக்க இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என வலியுறுத்தினோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, கட்சியின் மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT