தமிழ்நாடு

நெல்லை தங்கராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

3rd Feb 2023 03:30 PM

ADVERTISEMENT

கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

இதையும் படிக்க- நெல்லை தங்கராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மக்கள் கலைஞரான திரு. தங்கராஜ் அவர்கள் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அறிமுகமாகி, அதில் வெளிப்படுத்திய உணர்வுப்பூர்வமான நடிப்பால் நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். 

ADVERTISEMENT

அன்னாரது மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT