தமிழ்நாடு

திருநள்ளாறு அருகே வாய்க்கால் பாலம் உடைப்பு: போக்குவரத்து பாதிப்பு

3rd Feb 2023 10:43 AM

ADVERTISEMENT


காரைக்கால்: திருநள்ளாறு அருகே பிரதான சாலையின் குறுக்கே உள்ள வாய்க்கால் பாலம் உடைப்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் செல்லும் பிரதான சாலையின் வழியே கும்பகோணம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயணிக்க முடியும். அம்பகரத்தூர் அருகே தாமனாங்குடி கிராமத்தில் பிரதான சாலையின் குறுக்கே வாய்க்கால் பாலம் உள்ளது.

உடைந்த நிலையில் வாய்க்கால் பாலம்

ADVERTISEMENT

இந்த பாலம் கடந்த ஒரு மாதமாக ஒரு பகுதியில் தாழ்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் இச்சாலையில் பயணித்துவந்தன. கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் மழையால் பாலம் வெள்ளிக்கிழமை காலை உடைந்து, சாலையில் விரிசல் ஏற்பட்டது.

இதையும் படிக்க | மருந்து உற்பத்தி மதிப்பீடு: 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்

பொதுப்பணித்துறையினர்  விரைந்து சென்று சாலையில் தடுப்புகளை அமைத்தனர். இருசக்கர வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. பேருந்து உள்ளிட்ட பிற வாகனங்கள் இந்த மார்க்கத்தில் பயணிப்பதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வெளியூர்களில் இருந்து இந்த பாதையில் வரக்கூடியவர்கள் சிரமத்தை சந்திப்பார்கள் என கூறப்படுகிறது. பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப்  பணியை  மேற்கொள்ளவேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT