பாஜகவிடம் எச்சரிக்கையாக இருப்பதாக முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்தவருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடநாட்டில் எப்படிப்பட்ட செயலில் பாஜக ஈடுபட்டது, நட்பு ஆட்சிகள் எப்படியெல்லாம் கலைந்தன. அங்கு பாஜக எப்படி ஆட்சியை பிடித்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், பாஜகவிடம் எச்சரிக்கையுடன் இருக்கிறோம் எனக் குறிப்பிட்டார்.
படிக்க | இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம்: அண்ணாமலை பேட்டி
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி முறிந்துவிட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த பொன்னையன்,
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனியாகத்தான் இருந்தது. இந்த கேள்விக்கு பொருளில்லை. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள், அதனால் பாஜக எங்கள் பக்கம் இருக்கலாம். அதற்காக எங்களுக்காக பணிபாற்றலாம் எனக் குறிப்பிட்டார்.