தமிழ்நாடு

அண்ணா நினைவு நாள்: திருச்சியில் அன்பில் மகேஸ் தலைமையில் அமைதிப் பேரணி

3rd Feb 2023 10:55 AM

ADVERTISEMENT


திருச்சி: பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை அமைதிப் பேரணி நடைபெற்றது.

திருச்சி சி.என். நகரில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சாலை வரையில் இந்த அமைதிப் பேரணி நடைபெற்றது. பின்னர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்வில், மாநகரச் செயலர் மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட துணைச் செயலர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய  அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இதையும் படிக்க | அதானி விவகாரம்: 6-ம் தேதி நாடு தழுவிய போரட்டாம் - காங்கிரஸ் அறிவிப்பு


இதேபோல, அதிமுக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, அமமுக, தேமுதிக என பல்வேறு கட்சியின் நிர்வாகிகளும் சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT