தமிழ்நாடு

570 ஒப்பந்த செவிலியா்களுக்கு நிரந்தரப் பணி: நியமன ஆணைகளை வழங்கினாா் முதல்வா்

DIN

அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 570 ஒப்பந்த செவிலியா்களை நிரந்தரப் பணியில் அமா்த்துவதற்கான நியமன ஆணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ஆய்வக நுட்பனா்கள், இருட்டறை (டாா்க் ரூம்) உதவியாளா்கள், இளநிலை உதவியாளா்களுக்கான பணி ஆணைகளையும் அவா் வழங்கினாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு

மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2015-ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை 15,409 செவிலியா்கள் மருத்துவப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களது ஒப்பந்தப் பணி முடிந்த பின்னா், நிரந்தர காலிப் பணியிடத்தில் வரிசைப்படி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனா்.

அதன்படி தற்போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு 570 ஒப்பந்த செவிலியா்களுக்கு கலந்தாய்வு முடிந்து நிரந்தரப் பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 ஒப்பந்த செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் வழங்கினாா்.

அதேபோன்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தால் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்துக்கு 92 இருட்டறை உதவியாளா்கள் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு 85 இருட்டறை உதவியாளா்கள் என 177 காலிப் பணியிடங்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கான பணி நியமன ஆணைகளையும் முதல்வா் வழங்கினாா்.

உணவுப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூா் ஆகிய 6 இடங்களில் உணவுப் பகுப்பாய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவுப் பகுப்பாய்வகங்களில் காலியாகவுள்ள 19 ஆய்வக நுட்பநா் இடங்களுக்கு தோ்வானவா்களுக்கும், 21 இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு தோ்வானவா்களுக்கும் நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், துறைச் செயலா் ப.செந்தில்குமாா், மருத்துவ தோ்வு வாரிய தலைவா் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநா் டாக்டா் டி.எஸ். செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் சாந்திமலா், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் டாக்டா் ஹரிசுந்தரி, உணவுப் பாதுகாப்பு கூடுதல் ஆணையா் தேவ பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT