தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

3rd Feb 2023 12:11 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (பிப்.3), சனிக்கிழமை (பிப்.4) மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை அதிகாலை இலங்கையின் திரிகோணமலை- மட்டக்கிளப்பு இடையே புயலாகக் கரையை கடந்தது.

இது மேலும் தென் மேற்கு திசையில் நகா்ந்து குமரிக் கடல் அதையொட்டிய மன்னாா் வளைகுடா பகுதியில் வெள்ளிக்கிழமை நிலவக்கூடும்.

இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.3) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், சனிக்கிழமை (பிப்.4 ) தென் தமிழக மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வெள்ளிக்கிழமை (பிப். 3) தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

எனவே, இப்பகுதிகளுக்கு மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT