காரைக்கால் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
படிக்க | தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அறிவிப்பு
அதன்படி இன்று இரவு நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழையின் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.