தமிழ்நாடு

இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி ஓபிஎஸ் முறையீடு!

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி அளித்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை சின்னம் கோரியும், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் நடந்த பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும், தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிடக் கோரி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனு மீது மூன்று நாள்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், தயவு செய்து பதிலளிக்க காலதாமதம் செய்யாதீர்கள் என தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

மேலும், அதிமுக வழக்கில் பழனிசாமி தரப்பின் எதிர்மனுதாரர்கள் 3 நாள்களில் பதில் அளிக்கவும், இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணை நாளை மீண்டும் நடைபெறவுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில், பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், இரட்டை இலை எந்த தரப்பினருக்காவது கிடைக்குமா அல்லது முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அருகே பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளா் மீது தாக்குதல்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

SCROLL FOR NEXT