தமிழ்நாடு

எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுப்பு: பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியல்!

DIN

ஒசூர்: ஒசூர் அருகே எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கோபச்சந்திரம் கிராமத்தில் எருது விடும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அதுபோல் எருது விடும் விழா நடைபெறுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக விழா குழுவினர் அனுமதி கோரி கடிதம் அளித்தனர்.

ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு வரை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி அனுமதி அளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் எருதுகளை அழைத்துக் கொண்டு எருது விடும் இடத்திற்கு வந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாததால் எருது விழாவிற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து எருது விடும் விழாவிற்கு வந்த விவசாயிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே கற்களை அமைத்து போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தினர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதனால் இரண்டு சாலைகளிலும் ஐந்து கிலோமீட்டர் அளவிற்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எருது விடும் விழாவிற்கு அனுமதி அளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்து சீர் செய்யும் பணியில் சூளகிரி போலீசார் ஈடுபட்டனர். இதுகுறித்து சூளகிரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

SCROLL FOR NEXT