தமிழ்நாடு

காலை சிற்றுண்டி: அரசுப் பள்ளியில் சாப்பிட்டு ஆய்வு செய்த முதல்வர்!

DIN

வேலூரில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி சாப்பிட்டு உணவின் தரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில் இன்று காலையில் சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்திற்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, காந்தி நகர் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்க செய்யப்பட்ட சிற்றுண்டியைச் சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார்.

இதையடுத்து, அலமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், சிற்றுண்டியை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரூப்-4 தேர்வு எப்போது? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

SCROLL FOR NEXT