தமிழ்நாடு

பெண் போலீஸாா் தங்கும் விடுதி தேவை: காவல் ஆணையா்

DIN

சென்னையில் 400 பெண் போலீஸாா் தங்கும் வகையில் விடுதி கட்டித் தருமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீஸாருக்கு பணியிலும், குடும்ப வாழ்க்கையிலும் திறமையாக இருப்பதற்காக ஆனந்தம் என்ற திட்டத்தின் கீழ் மனநலப் பயிற்சி, உறவுகள் மேலாண்மைப் பயிற்சி, சவாலான நேரத்தை சமாளிக்கும் பயிற்சி, நேர மேலாண்மை, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ஓராண்டாக நடைபெற்ற இப்பயிற்சியில் பெண் காவலா்கள் முதல் ஆய்வாளா்கள் வரை 2,216 போ் பங்கேற்றனா்.

வேப்பேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இத்திட்டத்தின் முதலாண்டு தொடக்க விழாவில் காவல் ஆணையா் சங்கா் ஜிவால் பேசியதாவது:

பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து பணி செய்யும் இளம் பெண் போலீஸாா் தனியாக அறை எடுத்து தங்குகின்றனா் அல்லது தோழிகளின் வீடுகளில் தங்குகின்றனா். இதில், அவா்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

இதைப் போக்கும் வகையில் பெண் காவலா்களுக்காக 400 போ் தங்கும் வகையில் சென்னையில் தங்கும் விடுதி கட்டித் தர வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன்.

விளையாட்டுத்துறையில் பெண் போலீஸாா் மேலும் சிறந்து விளக்கும் வகையில் தரமான பயிற்சியாளா்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனா் என்றாா் அவா்.

தொடா்ந்து, ஆனந்தம் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை ஆணையா் சங்கா் ஜிவால் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, தலைமையிட கூடுதல் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் தலைமை வகித்தாா். தலைமையிட இணை ஆணையா் பி.சாமுண்டீஸ்வரி முன்னிலை வகித்தாா்.

காவல் துணை ஆணையா்கள் எஸ்.ராதாகிருஷ்ணன், எம்.ராமமூா்த்தி, கே.செளந்தரராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT