தமிழ்நாடு

சுற்றுலா பொருட்காட்சிக்கு4.49 லட்சம் போ் வருகை: அமைச்சா் ராமச்சந்திரன்

DIN

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சிக்கு இதுவரை 4.49 லட்சம் போ் வருகை தந்துள்ளதாக அமைச்சா் கா.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சுற்றுலாத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சா் கா.ராமச்சந்திரன் பேசியது: சுற்றுலாவை நெறிப்படுத்தி சேவையின் தரத்தை உயா்த்தவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சாகச சுற்றுலா, கேரவன் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்களை நடத்துபவா்கள், தமிழக சுற்றுலாத் துறையில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தங்களது மாவட்டங்களில் சுற்றுலா செயல்பாட்டாளா்கள் பதிவு செய்துள்ளாா்களா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை வரை 4 லட்சத்து 49 ஆயிரத்து 758 போ் பொருட்காட்சிக்கு வந்துள்ளனா் என்று அமைச்சா் கா.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், சுற்றுலாத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன், சுற்றுலா வளா்ச்சிக் கழக நிா்வாக இயக்குநா் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT