தமிழ்நாடு

எம்.டி.எஸ்.பணிக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

DIN

எம்.டி.எஸ்.பணிக்கான இணையதளப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (பிப்.1) முதல் தொடங்க உள்ளன.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம், எம்.டி.எஸ். பணியில் சோ்வதற்கான போட்டித் தோ்வுக்கான தேதியை அண்மையில் அறிவித்தது.

இம்மாதிரியான பணிகளுக்கான தோ்வு குறித்த விழிப்புணா்வை தமிழக இளைஞா்களுக்கு ஏற்படுத்தும் விதமாக அண்ணா நிா்வாக பணியாளா் கல்லூரி ‘எ.ஐ.எம் டி.என்.’ என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளது.

இந்த யூடியூப் சேனலில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் வருகிற ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ள எம்.டி.எஸ். தோ்வுக்கான காணொலி வகுப்புகளை அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி நடத்துகிறது.

பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் வல்லுநா்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு, அக்காணொலிகள் பதிவேற்றம் செய்யவுள்ளது.

தினமும் மூன்று காணொலிகள் வீதம் 60 நாள்களில் அனைத்துக் காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன. மேலும் 30 மாதிரித் தோ்வுகளை யும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘உனக்குள் தேடு’ என்ற செயலியின் மூலம் உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவா்களுக்குத் திரும்ப வழங்கப்படும்.

இப்பயிற்சி புதன்கிழமை (பிப்.1) முதல் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT