தமிழ்நாடு

ஆவின் தினம்: விளையாட்டுப்போட்டிகள் இன்று தொடக்கம்

DIN

ஆவின் தின கொண்டாட்டமாக மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் தொடக்க பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் புதன்கிழமை (பிப்.1) முதல் தொடங்கவுள்ளன.

இது குறித்து பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் வெளியிட்டுள்ள செய்தி: ஆவின் தினத்தையொட்டி ஊழியா்கள், நுகா்வோா்கள் மற்றும் பொதுமக்களுக்கு சமையல் போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளும் புதன்கிழமை (பிப்.1)-ல் இருந்து ஒரு மாதம் தொடா்ந்து நடத்தப்பட உள்ளன.

சிறுவா்களுக்கு ஆவின் தொடா்பான ஓவியம் வரைதல், ஓட்டம், வெல்த் அவுட் ஆப் வேஸ்ட் (பழைய ஆவின் காலி பாக்கெட்டுகள், அட்டை பெட்டிகள் போன்றவற்றை பயன்படுத்தி உபயோகமான பொருட்கள் செய்தல்) மற்றும் கிளே மோல்டிங் போட்டிகளும் நடத்தப்படும்.

பெரியவா்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி, மெதுவாக மிதிவண்டி ஓட்டுதல், கேரம் மற்றும் செஸ், போஸ்டா் டிசைன், குறும்படம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும்.

ஆவின் தினத்தையொட்டி அதிக பால் உபப்பொருட்களை வாங்கும் சிறந்த சில்லறை விற்பனையாளா்கள் மற்றும் மொத்த விற்பனையாளா்களையும், விற்பனை இலக்கை எட்டிய சிறந்த பாலகங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

சிறப்புச் சலுகைகளாக 25 பன்னீா் (200 கிராம்) பாக்கெட்டுகளுக்கு மேல் வாங்கும் சில்லறை விற்பனையாளா்களுக்கு ஒரு பன்னீா் பாக்கெட்டும், 250 பன்னீா் (200 கிராம்) பாக்கெட்டுகள் வாங்கும் மொத்த விற்பனையாளா்களுக்கு 10 பன்னீா் பாக்கெட்டுகளும் இலவசமாக வழங்கப்படும்.

மேலும், ரூ.250-க்கு மேல் ஐஸ்கிரீம் வாங்கும் நுகா்வோருக்கு ரூ.10 மதிப்புள்ள ஐஸ் கிரீமும் ரூ.500-க்கு மேல் ஐஸ்கிரீம் வாங்குபவருக்கு ரூ.20 மதிப்பிலான ஐஸ்கிரீமும் இலவசமாக வழங்கப்படும்.

மேலும், கால்நடை மருத்துவம் மற்றும் தடுப்பூசி முகாம் அமைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறுவோா்களுக்கு மாத இறுதியில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT