தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!

1st Feb 2023 09:05 AM

ADVERTISEMENT

வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கை கரைப் பகுதியை இன்று கடக்கவுள்ளது. இதனால், வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிப்ரவரி 3ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு, மீன்பிடிச் சீட்டு வழங்கப்படாததால் சுமார் 1,800 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் மீனவர்களுக்கும் நாளைவரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல் அரபிக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களும் நாளைவரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT