தமிழ்நாடு

மின் இணைப்புடன் 2.47 கோடி பேர் ஆதாரை இணைத்துள்ளனர்: செந்தில் பாலாஜி

DIN


தமிழகத்தில் நேற்று வரை 2.47 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் நேற்று (ஜன. 31) மட்டும் 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மற்றும் 2,811 சிறப்பு நடமாடும் முகாம்களின் மூலம் 6.63 லட்சம் எண்கள் இணைக்கப்பட்டது.

ஆன்லைனில் மூலம் இணைக்கப்பட்டது 1.62 லட்சம். நேற்று மாலை 7.00 மணி வரை மொத்தம் 2.47 கோடி பேர் இணைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 2 கோடியே 32 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதுதவிர 23 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 9 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.

ஜனவரி 31ஆம் தேதியுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நிறைவடையும் எனக் கூறப்பட்டது. ஆனால் அப்போது 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைக்காமல் இருந்ததால் பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT