தமிழ்நாடு

மே 1-ல் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவு!

25th Apr 2023 11:25 AM

ADVERTISEMENT

மே 1-ல் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர் தினத்தில்(மே.1) அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணிக்கு கூட்டம் நடத்த வேண்டு என உத்தரவிடப்பட்டுள்ளது.

கிராம சபைக் கூட்டம் மத சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது எனவும், கூட்டம் நடைபெறும் இடத்தை பொது மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT