சென்னை: திமுகவைச் சேர்ந்த சென்னை அண்ணா நகர் எம்எல்ஏ மோகன் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் முக்கிய நிர்வாகியாக இருக்கும் முன்னணி கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் திங்கள்கிழமை அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளத்தாகவும் புகார்கள் எழுந்த நிலையில், திங்கள்கிழமை (ஏப்.24) அதிகாலை சென்னை, கர்நாடகா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அண்ணாநகர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகின்றது.
மோகனினின் மகன் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நிர்வாகியாக உள்ளதால் இருவரது வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.