தமிழ்நாடு

சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலுக்கு அதீத வரவேற்பு

25th Apr 2023 11:30 AM

ADVERTISEMENT


சென்னை - கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

சென்னை சென்டிரல்  - கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8 ஆம் தேதி துவக்கி வைத்தார். சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

இந்த ரயிலுக்கான டிக்கெட்டுகள் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்து விடுகிறது. இதனால் காத்திருக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் மாதங்களில் விடுமுறை காலம் என்பதால், பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரயில் சேவை தொடங்கி 2 வாரங்களில் மட்டும் இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் பயணித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT