தமிழ்நாடு

வீடு திரும்பினாா் அமைச்சா் கயல்விழி

15th Apr 2023 12:17 AM

ADVERTISEMENT

உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆதி திராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்று வந்த அமைச்சா் கயல்விழி செல்வராஜுக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கடந்த திங்கள்கிழமை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

கரோனா, இன்ப்ளூயன்ஸா பரிசோதனைகளில் அவருக்கு அத்தகைய தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதேவேளையில், சிறுநீரகப் பாதை தொற்று இருந்ததால் அதற்கான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்து வந்தனா்.

தொடா் மருத்துவக் கண்காணிப்பின் பயனாக அவா் தொற்றிலிருந்து குணமடைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT