தமிழ்நாடு

முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

30th Sep 2022 12:01 AM

ADVERTISEMENT

 தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான அவருக்கு ஏற்கெனவே இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், அது இசட் பிளஸ்-ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானிக்கு (65) உள்ள அச்சுறுத்தல்கள் தொடா்பாக மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொண்ட மறுஆய்வைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புளூம்பொ்க் தரவரிசைபடி உலகின் 10-ஆவது பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளாா். அவருக்கு கடந்த 2013-இல் முதல்முறையாக கட்டண அடிப்படையில் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது மனைவியான நீத்தா அம்பானி ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் உள்ளாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், முகேஷ் அம்பானிக்கான பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ஆயுதம் தாங்கிய 40 முதல் 50 கமாண்டோக்கள் வரை சுழற்சி முறையில் அவருக்குப் பாதுகாப்பை மேற்கொள்வா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதும் 119 மிக முக்கிய பிரமுகா்களின் பாதுகாப்புப் பணியை சிஆா்பிஎஃப் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் முகேஷ் அம்பானி வீட்டருகே ஜெலட்டின் வெடிபொருள் நிரப்பிய காா் நிறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT