தமிழ்நாடு

லாரி-இருசக்கர வாகனம் மோதி விபத்து: மாணவன் பலி

30th Sep 2022 04:02 PM

ADVERTISEMENT

சீர்காழி அருகே திருவாலியில் லாரி, இருசக்கர வாகனத்தில் மீது மோதிய விபத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாளி மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் மதன் இவருக்கு வயது (13). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து, வீட்டில் இருந்த இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் (22) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருவாலி கடைவீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

 முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்ற பொழுது கிருபாகரனின் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த மதன் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதையும் படிக்க: காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

ADVERTISEMENT

படுகாயம் அடைந்த கிருபாகரன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் தப்பி தப்பி ஓடினார் இது குறித்து தகவல் அறிந்த திருவெண்காடு காவல் துறையினர் சிறுவன் மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT