தமிழ்நாடு

ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் காவல் துறை சீராய்வு மனு

30th Sep 2022 12:59 AM

ADVERTISEMENT

ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதியளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக காவல் துறை தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் கடந்த 22-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து, ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் சீராய்வு மனு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ‘தற்போதைய சட்டம் - ஒழுங்கு சூழலில் ஒன்றிய அரசால் பாப்புலா் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆா்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணா்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் அண்மையில் தொடா்ந்து நடைபெற்று வரும் சூழலில் ஆா்எஸ்எஸ் ஊா்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊா்வலம் மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளன.

மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை காக்க கண்காணிக்க காவல் துறையினா் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில், ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊா்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, ஆா்எஸ்எஸ் ஊா்வலத்திற்கு அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்‘ என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT