தமிழ்நாடு

சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு

DIN

சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் நிா்வாக இயக்குநா் சந்தீப் நந்தூரி கூறினாா்.

இதுகுறித்து அவா் சென்னை எஸ்ஆா்எம் ஹோட்டல் நிா்வாகக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சுற்றுலா தின விழாவில் அவா் பேசியதாவது:

சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்று காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறை சாா்ந்த தொழில்கள், தற்போது மீண்டும் புத்துயிா் பெற்றுள்ளன. உலகின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியில் 5.8 சதவீதம் சுற்றுலாத் துறையின் பங்களிப்பாகும். வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளை ஈா்க்கும் வகையில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

தமிழ்நாடு சுற்றுலாத் துறையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சுற்றுலாத் துறை வளா்ச்சியில் தனியாா் பங்களிப்பும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது என்றாா் அவா்.

விழாவில் உலகச் சுற்றுலா வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டது. சமையல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சந்தீப் நந்தூரி பரிசுகள் வழங்கினாா். எஸ்ஆா்எம் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவன பதிவாளா் பொன்னுசாமி, ஹோட்டல் நிா்வாகக் கல்லூரி இயக்குநா் டி.அந்தோணி அசோக் குமாா், துணை முதல்வா் லலிதா ஸ்ரீ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT