தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் எரிவாயு உருளைகள் வெடித்த கிடங்கிற்கு சீல்: காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவிரியம்பாக்கத்தில் எரிவாயு உருளைகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் உருளைகள் வெடித்த சம்பவத்தின் காரணமாக அக்கிடங்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் மா.ஆர்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் தனியாருக்குச் சொந்தமான எரிவாயு உருளைகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு உள்ளது. இதில் கடந்த செப்.28 ஆம் தேதி புதன்கிழமை வாயுக்கசிவு காரணமாக உருளைகள் வெடித்து சிதறின. இச்சம்பவத்தில் 6 ஆண்கள், 5 பெண்கள் ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர். தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த இவர்களில் கடலூரை சேர்ந்த ஆமோத்குமார்(26), சந்தியா(21) ஆகியோர் வியாழக்கிழமையும், சந்தியாவின் தந்தை ஜீவானந்தம்(46) வெள்ளிக் கிழமையும் உயிரிழந்தனர். உயிரிழப்புகள் இதுவரை 3 ஆக இருந்து வரும் நிலையில் மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஓரகடம் போலீசார் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து மோகன்ராஜ் என்பவரை வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, 'எரிவாயு உருளைகள் வெடித்த சம்பவம் தொடர்பாக தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். முக்கியக் குற்றவாளி தலைமறைவாக உள்ளார். அவரையும் தேடி வருகிறோம். இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். கிடங்கு உரிமையாளராக ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமாரின் மனைவி சாந்தி என்பதும் தெரிய வந்துள்ளது. கிடங்கில் இருந்த அனைத்து உருளைகளும் படிப்படியாகவும், பாதுகாப்பாகவும் தரம் பிரிக்கப்பட்டு மாற்று இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தேவரியம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த எரிவாயு உருளைக் கிடங்குக்கு பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பான பெசோ தான் அனுமதி வழங்கியிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. தற்போது கிடங்குக்கு பூட்டி சீல் வைத்துள்ளோம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT