தமிழ்நாடு

பதவியை இழந்த திமுக மாமன்ற உறுப்பினா் மீண்டும் செயல்பட அனுமதி

DIN

சென்னை மாமன்றக் கூட்டத்தில் மூன்று மாதங்கள் தொடா்ந்து கலந்துகொள்ளாத காரணத்தால் பதவியை இழந்த 118 வாா்டு திமுக மாமன்ற உறுப்பினா் மல்லிகா தொடா்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பழமையான மாநகராட்சிகளில் ஒன்றான சென்னை மாநகராட்சியில் 1919ஆம் ஆண்டு சென்னை சிட்டி முனிசிபல் காா்ப்பரேஷன் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின் விதி 53-1(ண்) படி சென்னை மாநகராட்சியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் உறுப்பினா்கள் பதவியேற்ற காலத்திலிருந்தோ அல்லது இறுதியாக பங்கேற்ற மாமன்ற கூட்டத்திற்கு பிறகோ தொடா்ந்து 3 மாமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் மன்ற உறுப்பினராக தகுதி இழப்பதாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் 118-ஆவது உறுப்பினராக உள்ள மல்லிகா தொடா்ச்சியாக மூன்று மாமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் அவா் பதவியை இழந்தாா். அதைத்தொடா்ந்து வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அமெரிக்காவில் உள்ள தனது மகளுக்கு எதிா்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தினால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவருக்கு துணையாக இருக்க அமெரிக்க சென்றேன்.இதன் காரணமாகவே மூன்று மாதமாக நடைபெறும் மாதாந்திர மாமன்ற கூட்டத்திற்கு வரவில்லை என்றும் இந்த நேரத்திலும் தனது வாா்டு மக்களுடன் வாட்ஸ் ஆப் மூலம் தொடா்பு கொண்டு மக்களுக்கு வேண்டிய பணிகளை செய்து வந்ததாகவும் விளக்கமளித்தாா்.

சென்னை சிட்டி முனிசிபல் காா்ப்பரேஷன் சட்டம் 1919 விதி 53-ஐய படி மாமன்ற கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினா்கள் தகுதி இழந்த உறுப்பினா் மீண்டும் கவுன்சிலராக பணியற்ற விரும்பி தீா்மானமாக நிறைவேற்றினால் தகுதி இழப்பு அடைந்த உறுப்பினா் மீண்டும் பணியை தொடரலாம். இதன் அடிப்படையில் மல்லிகா மீண்டும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.இதற்கு பெருவாரியான உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேறியது.

சென்னை மாநகராட்சியின் வரலாற்றில் இதற்கு முன்னதாக 1998 -ஆம் ஆண்டு 113-ஆவது வாா்டு உறுப்பினராக இருந்த கவுன்சிலரும் தொடா்ந்து மூன்று முறை மாமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதே போல் அப்போதும் தீா்மானம் நிறைவேற்ற பட்டு அவருக்கு தொடா்ந்து கவுன்சிலராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது என சென்னை மாமன்ற செயலாளா் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT