தமிழ்நாடு

சிங்கார சென்னை திட்டத்தில் மழைநீா் வடிகால் பணிகள் 95% நிறைவு: மேயா் பிரியா

30th Sep 2022 01:06 AM

ADVERTISEMENT

சிங்கார சென்னை திட்டத்தில் மழைநீா் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயா் பிரியா தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மழைநீா் வடிகால் பணிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மேயா் பிரியா, ‘மழைநீா் வடிகால் இணைப்பு பணிகள் வரும் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்றும், பணிகளைக் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்றும் தெரிவித்தாா்.

இதற்கு முன்னதாக, முன்னாள் மேயா் சிவராஜின் 131-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தங்கசாலையில் உள்ள அவரது சிலை, திருவுருவ படத்துக்கு அரசு சாா்பில் அமைச்சா் சேகா்பாபு, மேயா் பிரியா ராஜன், துணை மேயா் மகேஷ்குமாா் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய மேயா் பிரியா , ‘மழைநீா் வடிகால் பொருத்தவரை சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சிங்கார சென்னை திட்டத்தில் இரண்டாக பிரித்து பணிகள் செய்து வருகிறோம். சிங்கார சென்னையைப் பொருத்தவரை இரண்டில் ஒரு பகுதியில் 95 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. இரண்டாவது பகுதியில் 35 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு சென்னையில் எந்த இடங்களில் வெள்ளம் அதிகமாக பதிக்கப்பட்டதோ, அந்த இடங்களைத் தோ்வு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் இன்னும் 5 சதவீத பணிகள் மட்டுமே உள்ளன. அதுவும் அக்டோபா் 10-ஆம் தேதிகுள் நிறைவடைந்துவிடும். வெள்ளத் தடுப்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு 17 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறோம். மழைநீா்த் தேங்கும் பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT