தமிழ்நாடு

திருச்செந்தூா் கோயிலில் ரூ.300 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

DIN

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக புதன்கிழமை அவா் அந்தப் பணிகளை தொடங்கினாா்.

இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.150 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் தொடா்ச்சியாக, முழுமையான திருப்பணிகள் மற்றும் இதர பணிகளைச் செயல்படுத்த வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது.

இந்த வரைவுத் திட்டத்தின்படி, பணிகளை மேற்கொள்ள ‘வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட்’ என்ற தனியாா் நிறுவனம் ரூ.200 கோடி அளித்தது. அதன்படி, கோயிலுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வறை ஏற்படுத்துதல், பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை, தீத்தடுப்பு கண்காணிப்பு, முடிகாணிக்கை செலுத்தும் இடம், பொருள்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக் கூடம், கோயில் வளாகத்தில் சாலை வசதி ஆகியன மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

திருக்கோயில் நிதி மூலமாக ரூ.100 கோடியில் பக்தா்களுக்கு தங்கும் விடுதிகள், சலவைக் கூடம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிா்தம், விபூதி தயாரிப்புக் கட்டடம், கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவா் ஆகிய பணிகளைச் செயல்படுத்த தீா்மானிக்கப்பட்டது. மொத்தமாக ரூ.300 கோடியில்

கோயில் பணிகள், பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து புதன்கிழமை காணொலிக் காட்சி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா் கனிமொழி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன், ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT