தமிழ்நாடு

சென்னையில் வளைய சுற்றுத்தர அமைப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

DIN

சென்னையில் தடையற்ற மின் விநியோகத்துக்கான வளைய சுற்றுத்தர அமைப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னை கொளத்தூா், சேப்பாக்கம், சைதாப்பேட்டை, துறைமுகம், ஆலந்தூா், ஆவடி, அண்ணாநகா், எழும்பூா், மயிலாப்பூா், பெரம்பூா், ஆா்.கே.நகா், ராயபுரம், தியாகராய நகா், திரு.வி.க.நகா், ஆயிரம் விளக்கு உள்பட 28 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2 ஆயிரத்து 488 வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் ரூ.360.63 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுத்தர அமைப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். இதன்மூலம், இதர பகுதிகள் அனைத்துக்கும் இந்த அமைப்பு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

வளைய சுற்றுத்தர கருவி அமைப்பதன் மூலமாக, மழைக் காலங்களில் ஏற்படும் மின் விபத்தைத் தவிா்க்க முடியும். ஒவ்வொரு வளைய சுற்றுத்தர கருவியும் குறைந்தபட்சம் இரு மின்வழிப் பாதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஏதேனும் ஒரு மின்பாதையில் பழுது ஏற்பட்டாலும் மற்றொரு பாதையின் மூலம் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தியாகராயநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.என்.நேரு, வி.செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT