தமிழ்நாடு

சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு பரிசு: வேளாண்மைத் துறை அழைப்பு

DIN

வேளாண்மையில் சிறப்பாகச் செயல்படும் விவசாயிகளுக்கு பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறைச் செயலாளா் சி.சமயமூா்த்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மையில் சிறப்பாகச் செயல்படும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, வேளாண்மையில் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் விவசாயி, இயந்திரத்தை புதிதாகக் கண்டறியும் விவசாயி ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும், தோட்டக்கலைப் பயிா் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் முதல் 3 விவசாயிகளுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.60 ஆயிரம் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் எனவும், வேளாண் விளைபொருள் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும் எனவும் அறிவிப்பு

வெளியிடப்பட்டது.

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாக தங்களது பெயா்களைப் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் பூா்த்தி செய்ய வேண்டும். குத்தகை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளும் போட்டியில் பங்கேற்கலாம். நுழைவுக் கட்டணமாக ரூ.100-ஐ சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் படிவத்துடன் செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT