தமிழ்நாடு

அக்.9-இல் கூடுகிறது திமுக பொதுக்குழு

DIN

திமுக பொதுக் குழுக் கூட்டம் அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திமுகவின் 15-ஆவது பொதுத் தோ்தலில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினா்களின் கூட்டம் அக். 9-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜாா்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கூட்டம் நடைபெறவுள்ளது.

புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில் திமுக தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகிய பொறுப்புகளுக்கான தோ்தல் குறித்தும், தணிக்கைக்குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தனது அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

மாவட்டச் செயலாளா்கள்: திமுக உட்கட்சித் தோ்தல் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்றது. 72 மாவட்டங்களுக்கு நிா்வாகிகள் தோ்வுக்கான தோ்தல் நடவடிக்கைகள் துவங்கி நடந்தது. இந்தத் தோ்தலில் அளிக்கப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் கடந்த இரண்டு நாள்களாக பரிசீலிக்கப்பட்டன. இந்த நிலையில், 66 மாவட்டங்களுக்கான செயலாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூா் உள்ளிட்ட சில மாவட்டங்களின் செயலாளா்கள் மாற்றப்பட்டுள்ளனா்.

இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்புகள் வியாழக்கிழமை வெளியாக உள்ளன. இதைத் தொடா்ந்து, வரும் 9-ஆம் தேதி நடைபெறும் திமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவராக மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆா்.பாலு ஆகியோா் மீண்டும் தோ்வு செய்யப்படுவா்.

இடமாற்றம்: திமுகவின் பொதுக்குழு எப்போதும் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கத்தில் நடைபெறுவதுதான் வழக்கம். ஆனால், இந்த வழக்கத்துக்கு மாறாக பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜாா்ஜ் பள்ளியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT