தமிழ்நாடு

பேரணி அனுமதிக்கு நீதிமன்றத்தை நாடுவோம்: தொல். திருமாவளவன்

29th Sep 2022 03:45 PM

ADVERTISEMENT

நாமக்கல்: அக்.2-ஆம் தேதி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்தை நாடவிருப்பதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

அக்.2-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் - இடதுசாரி கட்சிகள் இணைந்து நடத்தவிருந்த சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம் என நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், நாமகிரிப்பேட்டை இரவு காவலர் பரமசிவம் மர்ம சாவை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், கல்குவாரிக்கு எதிராக கரூரில் செயல்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதனை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும், ஓமலூர் வட்டம் ஏனாத்தியில் அம்பேத்கர் சிலை இடிக்கப்பட்டதை கண்டித்தும், பெரிய மணியில் பள்ளி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து பேசிய தொல். திருமாவளவன், அக் 2.ஆம் தேதி 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதே வேளையில் விடுதலை சிறுத்தைகள் - இடதுசாரி கட்சிகள் இணைந்து நடத்த இருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. எங்களுடைய பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரி காவல்துறை தலைவரை அணுகி வலியுறுத்துவோம். அவ்வாறு அனுமதி வழங்காதபட்சத்தில் நீதிமன்றத்தை நாடி மனித சங்கலியை கட்டாயம் நடத்துவதற்கான முயற்சியை மேற்கொள்வோம் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT