தமிழ்நாடு

திருப்பதி பிரமோற்சவம்: சேலத்திலிருந்து செல்லும் 5 டன் வாசனை மலர்கள்!

29th Sep 2022 02:03 PM

ADVERTISEMENT

 


திருமலை திருப்பதியில் நடைபெறும் ஸ்ரீவாரி பிரம்மோற்சவ வைபவத்தை முன்னிட்டு சேலம் ஸ்ரீ பக்திசாரர் பக்த சபா சார்பில் சேலத்தில் ஐந்து  டன் வாசனை மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெறும் அணைத்துச் சிறப்பு விழாக்களுக்கு சேலம் ஸ்ரீ பக்தி சாரர் பக்தி சபா சார்பில் வாசனை மலர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாலைகள் அனுப்பப்படுவது வழக்கம். 

இந்த நிலையில். புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். பெருமாளுக்கு புரட்டாசி மாதத்தில் நித்ய பூஜைகள் மற்றும் சிறப்பு வைபவம்  நடைபெற்று வருகிறது. பெருமாள் திருக்கோயில்களில் விஷேச அபிஷேகம் ஆராதனை நடைபெறும். 

ADVERTISEMENT

இந்தநிலையில் திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத சிறப்பு வைபவம் மாதம் முழுவதும் நடைபெறும். கடந்த 27ம் தேதி பிரம்மோற்சவம் துவங்கி வருகின்ற 5ம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் இந்த வைபவத்திற்கு இந்தியா மட்டுமல்லாது பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை புரிந்து பிரம்மோற்சவ வைப்பவத்தில் கலந்து கொள்வார்கள்.  

இந்த பிரம்மோற்சவ வைபவத்தின் போது, திருமலை திருப்பதி முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்படும். அதனடிப்படையில் பிரம்மோற்சவ வைபோகத்திற்கு சேலத்தில் இருந்து பூக்களைத் தொடுத்து அனுப்பி வைக்கப்படுவது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பூக்கள் தொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

பிரம்மோற்சவத்தையொட்டி வருகின்ற சனிக்கிழமை நடைபெறும் கருட சேவைக்கு பூக்கள் அனுப்பி வைப்பதற்காக சேலம் ஸ்ரீ பக்திசாரர் பக்த சபா சார்பில்  ஏராளமான பெண்கள் பங்கேற்று செவந்தி, சாமந்தி, அரளி, துளசி, சம்பங்கி, மரிக்கொழுந்து  உள்ளிட்ட வித விதமான வாசனை மலர்கள் 5 டன் எடை உள்ள பல்வேறு விதமான மலர்களை மாலையாகத் தொடுத்தனர்.

படிக்க: பிரம்மோற்சவத்தின் 3-ம் நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி!

பின்னர் இந்த மாலைகள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு மாலையில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டு தனி லாரி மூலம் திருப்தி திருமலைக்குப் பாதுகாப்பாக இன்று மாலை அனுப்பி வைக்கப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற பெண் பக்தர்கள் கூறும்போது, 

திருமலை திருப்தியில் நடைபெறும் வைபவத்திற்கு தாங்கள் தொடுக்கும் பூக்கள் அனுப்பப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் குறிப்பாக திருமலை வாசன்  திருமாலுக்கு எங்கள் கைகளால் தொடுத்த மலர் மாலை சாத்தப்படுவது நினைக்கும்போது மனதிற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. 

திருமலைக்குச் செல்ல முடியாத நிலையில் நாங்கள் தொடுத்த பூக்கள் செல்வதன் மூலம் திருமலைக்குச் சென்று வந்த புண்ணியமும் பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்ட பாக்கியமும் கிடைத்தது போல எங்களுக்கு தோன்றுகிறது என
உணர்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்தப் பூக்கள் தொடுக்கும் நிகழ்ச்சியில் ஸ்ரீ பக்தி சாரார் பக்தி சபா சார்பில் பூக்களைத் தொடுக்க வந்த ஏராளமான பெண்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை சுந்தரி சண்முகம் மணிசங்கர் குமார் மோகன் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பாகச் செய்திருந்தனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT