தமிழ்நாடு

சென்னை ரயில் கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் உயா்வு

29th Sep 2022 11:46 PM

ADVERTISEMENT

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆயுதப் பூஜை, தீபாவளி, கிறுஸ்துமஸ், பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகள் வரிசையாக வரவுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கட்டண உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்துக்குள்பட்ட உள்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபா் 1 முதல் 31.1.2023 வரை ரூ. 10-இல் இருந்து நடைமேடை கட்டணம் ரூ. 20-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூா், தாம்பரம் , காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூா், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளாதக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT