தமிழ்நாடு

இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

29th Sep 2022 09:17 AM

ADVERTISEMENT

சிதம்பரம்:  சிதம்பரம் அருகே உள்ள இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் பரங்கிப்பேட்டை சாலையில் அமைந்துள்ள சீனு (இந்து முன்னணி ஆதரவாளர்) என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த  ஜீப் மற்றும்  வீட்டின் முன்பு இருந்த பனை மரத்தின் மீதும் புதன்கிழமை நள்ளிரவு மர்ம நபர்களால் இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது . 

இதில் ஜீப்பின் முன் பகுதியில் புகை படிந்துள்ளது. பனை மரத்தின் முன்பு கீழே விழுந்து எரிந்துள்ளது வேற எந்த பாதிப்பும் இல்லை.

இதையும் படிக்க: ஒடிசா இறால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு: 28 பேர் பாதிப்பு

ADVERTISEMENT

சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி எஸ்.ரமேஷ்ராஜ் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT