தமிழ்நாடு

வெளியானது 'நானே வருவேன்' திரைப்படம்: ரசிகர்கள் கொண்டாட்டம்

29th Sep 2022 09:52 AM

ADVERTISEMENT

தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகவும் பேசப்பட்ட படங்களாக அமைந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'நானே வருவேன்' இன்று வெளியானது.

ADVERTISEMENT

இந்நிலையில்  படம் வெளியான கோவையில் உள்ள அனைத்து திரையரங்களிலும் ரசிகர்கள் காலை முதல் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட தனுஷ் தலைமை நற்பணி மன்றத்தின் சார்பாக காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ள திரையரங்கில் காலை முதல் ரசிகர்கள் உற்சாகமாக அமைதியான முறையில் திரையரங்கிற்கு வந்தனர்.

இதையும் படிக்க: தெற்கு சாண்ட்விச் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இதில் கோவை மாவட்ட கௌரவத் தலைவர் மணி, தலைவர் சங்கர், செயலாளர் அருள் முருகன் ,பொருளாளர் அந்தோணி மற்றும் நிர்வாகிகள் பழனி வினோத் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் படைசூல தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படத்தை உற்சாகமாக  ஆடல் பாடலுடன் வரவேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT