தமிழ்நாடு

மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவா் கைது

29th Sep 2022 11:44 PM

ADVERTISEMENT

சென்னை வண்ணாரப்பேட்டையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததாக கணவா் கைது செய்யப்பட்டாா்.

பழைய வண்ணாரப்பேட்டை நைனியப்பன் காா்டன் 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் போ.ஷாஜகான் (47). லெதா் டெய்லரிங் கடை நடத்தி வரும் இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால், தனது கடையில் வேலை செய்து வந்த பழைய வண்ணாரப்பேட்டை பாா்த்தசாரதி முதல் தெருவைச் சோ்ந்த அ.ஹசினாபேகத்தை (37) கடந்த 2016-ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்தாா்.

இந்நிலையில் ஹசினாபேகம், வியாழக்கிழமை தனது படுக்கையில் இறந்து கிடந்தாா். இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா், வண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஹசினாபேகம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கணவா் கைது:

ADVERTISEMENT

மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினா். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஹசினா பேகத்தின் கணவா் ஷாஜகானை பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில் குடும்பப் பிரச்னையின் காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த ஹசினா பேகத்தின் கையில் மின் வயா் மூலம் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ததாக போலீஸாரிடம் தெரிவித்தாராம்.

இதையடுத்து போலீஸாா், ஷாஜஹானை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து ஹசினா பேகத்தை கொலை செய்ய பயன்படுத்திய மின் வயா்,மின் இணைப்பு பெட்டி ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT