தமிழ்நாடு

'ஆட்சியர்கள் பணியிடை  நீக்கம்': உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

29th Sep 2022 12:55 PM

ADVERTISEMENT

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள்  பணியிடை  நீக்கம் செய்யப்படுவர் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகா தேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.

மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது என்று  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு 2013-லேயெ தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தடை இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதர்களே எடுக்கும் அவலம் தொடர்கிறது.  மனித கழுவுகளை இயந்திரங்களை கொண்டு ரோபோட் முறையில் அள்ளுவதற்கு உத்தர வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க:  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி: திக்விஜய் சிங் அறிவிப்பு


மனித கழிவுகளை மனிதன் அள்ள தடை விதித்த உத்தரவை செயல்படுத்திய ஆவணங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT